Preparatory Fasting Prayer Days for Holy Communion | March 3, 4 and 5 2022 (Friday, Saturday and Sunday) | Prayer Points | திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தும் உபவாச ஜெப நாட்கள் | மார்ச் 3, 4 மற்றும் 5 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள் | Pr. Robert Simon | Carmel Ministries

Preparatory Fasting Prayer Days for Holy Communion | March 3, 4 and 5 2022 (Friday, Saturday and Sunday) | Prayer Points

திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தும் உபவாச ஜெப நாட்கள் | மார்ச் 3, 4 மற்றும் 5 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்

ஜெபியுங்கள்!

1. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் மாமிசத்திற்குரியவர்களாய் இராமல் ஆவிக்குரியவர்களாய் இருக்கும்படிக்கு.

2. நம்முடைய வாலிப ஆண்-பெண் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் மனித சித்தம், உலகத்தின் வழிகள் போன்றவைகள் மேற்கொள்ளாமல் தேவசித்தம் முற்றுமாய் நிறைவேற.

3. நாம் ஒவ்வொருவரும் ஆத்தும ஆதாயம் செய்யம்படிக்கு. குறிப்பாக இரட்சிக்கப்படாத குடும்ப உறவுகள், நண்பர்கள், அயலகத்தார் இரட்சிக்கப்பட பிராயசப்படவேண்டும்.

4. குடும்பங்களில் தேவசமாதானம் காணப்படவேண்டும்.

5. விசுவாச குடும்பங்களில் சுபாவ அன்பு தணிந்துபோகக்கூடாது – கணவர்-மனைவி, பெற்றோர்-பிள்ளை, உடன்பிறப்புகள், ஆசிரியர்-மாணவர், நண்பர்கள், போதகர்-விசுவாசிகள் போன்ற உறவுகளில் சுபாவ அன்பு தழைக்கவேண்டும்.

6. சபைகள் சத்தியத்திற்கு சாட்சியும் தூணும் ஆதாரமுமாய் விளங்கவேண்டும்.

7. தேசத்தில் பிரிவினைவாத சக்திகள் அழிக்கப்பட்டு மக்கள் நடுவில் ஒரு நல்லிணக்கம் காணப்பட. இந்த அசாதாரண சூழ்நிலையில், நம்முடைய நாட்டில் பொருளாதார நிலைமை சீரடைந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட ஜெபியுங்கள்.

8. உக்ரைன் யுத்தத்தின் பாதிப்பு மற்றும் சேதங்களினால் பிசாசின் கை
ஓங்காமல் தேவ ஆளுகை காணப்பட.

9. இந்த யுத்தத்தின் மேகம் நம்மை விழிப்புடன் இருக்கசெயது இயேசுவின்
வருக்கைக்கு ஆயத்தப்பட.

10. இந்த யுத்தத்தில் நேர்ந்த பாதிப்புகளின் காரணமாக தங்கள் சொந்த
நாடுகளுக்கு செல்லமுடியாமல் தவிக்கும் மக்கள், மாணவர்கள் போன்றவர்களின் பாதுகாப்புக்காக ஊக்கத்தோடு பாரத்தோடு ஜெபியுங்கள்.

 

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்

Share with