Preparatory Fasting Prayer Days for Holy Communion | March 31, April 1 and April 2, 2022 (Thursday, Friday and Saturday) | Prayer Points
திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தும் உபவாச ஜெப நாட்கள் | மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2, 2022 (வியாழன், வெள்ளி, சனி) | ஜெபக்குறிப்புகள்
ஜெபியுங்கள்!
1. குடும்பத்தில் இரட்சிக்கப்படாதவர்கள் இரட்சிக்கப்பட.
2. குடும்ப உறவுகளில் உள்ள விரிசல்கள் நீங்கி குடும்பங்களில் தெய்வீக சமாதானம் காணப்பட.
3. நமது பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்க; அவர்கள் வாழ்வுவளம் பெரிதாயிருக்க.
4. கோணலும் மாறுபாடுமான மக்களின் மத்தியில் நாம் திருவசனத்தைப் பிடித்துக்கொண்டு திசைக்காட்டும் கலங்கரை தீபங்களாக விளங்க.
5. நாம் அனைவரும் தரிசனம், தாகம், திருப்பணி (Vision, Passion, Mission) என்ற நிலையில் ஓய்வின்றி இரவும் பகலும் செயல்பட.
6. பணித்தளங்களில், கல்விக்கூடங்களில், நம் குடியிருப்பு பகுதிகளில், நம் உறவுகள் நடுவினில், நாமும் நம் குடும்பமும் கர்த்தருக்கென்று எரிந்து பிரகாசிக்கிற தீபச்சுடர்களாக, சாட்சிகளாக விளங்க.
7. நம்முடைய வாழ்க்கையின் எல்லையெங்கும் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று எழுதப்பட.
8. தரித்திரம், கடன்சுமை, குறைவு என்று இல்லாது சுபிட்சத்துடன், நிறைவுடன் வாழ.
9. நமது சபையின் ஊடகவியல் ஊழியத்தின் மூலமாக இன்னும் பல ஆயிரங்கள் சந்திக்கப்பட.
10. ‘வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்’ (VNIK), ‘ஜெபநேரம்’ (ToP) நிகழ்ச்சிகள் மூலம் நமது சபையினர் (குறிப்பாக வாலிப பிள்ளைகள்) இன்னும் ஆழமான, அர்ப்பண உணர்வுடன் கூடிய ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / பாஸ்டர் இராபர்ட் சைமன்