Sermon Title / தேவ செய்தி தலைப்பு : Aanalaum… / ஆனாலும்… / But…
Sermon Date / தேவ செய்தி நாள் : 05.07.2020
Message by / போதகர் : Pr. Robert Simon / முனைவர். இராபர்ட் சைமன்
உலகம் முழுவதும் முழுவதையும் புரட்டிப்போட்ட கொள்ளை நோய்கள் ஏதாகிலும் உண்டா என்று யோசித்தபோது பளிச்சென்று தேவன் இந்த வார்த்தைகளை எனக்கு காண்பித்தார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் தேவன் ஏசாயாவுக்கு கொடுத்த ஒரு வார்த்தை:
ஏசாயா 60 : 2 கூறுகிறது
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்;ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
எல்லாவற்றையும் மேற்கொண்டோம் என்று நாம் நினைத்து கொள்கிறோம். ஆனாலும் இன்றைய நிலைமையில் நினைக்கும் போது சற்று கடினமாக உள்ளது.
ஏசாயா 59 : 2 கூறுகிறது “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது”.
அரசியல்வாதிகள், வியாபாரம் செய்பவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் பொய் பேசுகிறார்கள். சத்தியத்தின்படி வழக்காடுகி கிறார்களா? இல்லை. கொடுமையான செய்கைகள் அவர்களுடைய கைகளில் இருக்கிறது. அவர்கள் யோசிப்பது எல்லாம் அக்கிரமமாக இருக்கிறது. சமாதானத்தின் வழியை அவர்களால் அறிய முடியவில்லை.
ஏசாயா 59 : 5 கூறுகிறது “கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள் ; ….
கட்டுவிரியன் என்பது விஷப்பாம்பு ஆகும். விஷப்பாம்பின் முட்டைகளை அடைகாத்து அதை பெருக பண்ணுகிறார்கள். அதாவது விஷத்தை பெருக பண்ணுகிறார்கள். எங்களுக்கு முன்பாக வைத்த உம்முடைய நியாயப்பிரமாணத்திற்கு தக்கதாக நடவாமல் போனோம்.
ஏசாயா 59 : 5 கூறுகிறது “நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று”.
ஏசாயா 59 : 8 கூறுகிறது“ சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக் கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்”.
அவர்கள் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.
நம்முடைய பாவங்கள் நமக்கு சாட்சி சொல்கிறது. சத்தியம் தள்ளுபடி ஆயிற்று. எனவே சமாதானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆனாலும்
கர்த்தருடைய பிள்ளைகளோடு தேவன் உடன்படிக்கை பண்ணுகிறார். என்ன உடன்படிக்கை பண்ணுகிறார்?
எழும்பி பிரகாசி ஆனாலும் கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது… என்று தேவன் கூறுகிறார்
யார் எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று தேவன் கூறுகிறார்? யாரோடு தேவன் உடன்படிக்கை பண்ணுகிறார்?கர்த்தருடைய பிள்ளைகள் எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று, கர்த்தருடைய பிள்ளைகளோடு தேவன் உடன்படிக்கை பண்ணுகிறார்.
இப்படிப்பட்ட ஒளி உன் மீது (கர்த்தருடைய பிள்ளைகள் மீது) வீசும்போது மற்றவர்கள் உன்னிடம் வந்து கேட்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பார்கள்.
தானியேல் 9: 3 –ல் தானியேல் இவ்வாறு தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தார்
“நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி,
தானியேல் நெருக்கத்தின் காலத்திலே இருந்த காலத்தில். முகத்தை தேவனுக்கு நேராக நோக்கி அறிக்கை செய்தார். நீங்களும் தேவனை நோக்கி அறிக்கை செய்யுங்கள்.
“ஆண்டவரே கேளும் ஆண்டவரே என்னுடைய பாவங்களை மன்னியும்”
என்று அறிக்கை செய்யுங்கள்.
“ஆனாலும் என் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்பும் உண்டு” என்று வேத வசனம் சொல்லுகிறபடி தேவன் நம்மை கண்டிப்பாக மன்னித்து, அவர் நம்மை எழும்பிப் பிரகாசி பண்ணுவார்”.
கர்த்தருடைய கிருபையினால் நம்முடைய இருதயம் சந்தோஷமாகி மகிழ்ந்து பூரிக்கும்.
இந்த தேவ செய்தியை கேட்டு எழும்பி பிரகாசிப்பது மட்டுமல்லாமல்,
ஆனாலும்
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும்,
தேவனுடைய கிருபைக்குள்ளும் வருவோமா.