Anniyabashayil Pesungal | அந்நிய பாஷையில் பேசுங்கள் | Speak in Tongues | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon
நாள் : 12.07.2020
தலைப்பு : அந்நிய பாஷை பேசுதல்
போதகர் : முனைவர். இராபர்ட் சைமன்
1 கொரிந்தியர் 14 : 18 -ல் பவுல் இவ்வாறு கூறுகிறார் “உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்”.
பவுல் அன்றைக்கு சபைக்கு எழுதுகிறார் நான் உங்களெல்லாரிலும் அதிகமாய் பாஷைகளைப் பேசுகிறேன் அதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
இதை நாம் எல்லாரும் பழகிக் கொள்ள வேண்டும். இன்று நம்மில் எத்தனை பெற்றோர்களுக்கு, எத்தனை போதகர்களுக்கு, எத்தனை வாலிப தலைவர்களுக்கு இந்த பாரம் இருக்கிறது? நான் பேசுவது மட்டுமல்ல, மற்றவர்களும் பேச வேண்டுமென்று எத்தனை பேர் விரும்புகிறார்கள்?
நீ அந்நிய பாஷையில் பேசும்போது ஏதோ ஒன்றை கட்டுகிறாய் என்று பவுல் கூறுகிறார். என்ன கட்டுகிறாய்? எங்கே கட்டுகிறாய்? இதனால் என்ன நன்மை ஏற்படுகிறது, என்பதை குறித்து இந்த தேவ செய்தியில் நாம் காணமுடியும். என் தேவன் எனக்காக என்ன கட்டுகிறார்?
அந்நிய பாஷையை நாம் எப்படி தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்?
- முதலாவது எனக்குள்ளே அந்நிய பாஷை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாஞ்சை வேண்டும்.
- அவரிடத்தில் நாம் கேட்க வேண்டும்
- அவர் எனக்கு அந்நிய பாஷை பேசும் வரத்தை தருவார் என்று விசுவாசிக்க வேண்டும்.
- அவர் கொடுக்கும் அந்த வரத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- பெற்றுக் கொண்ட பின் அதை வாழ்க்கையிலே பேசி பழக தொடங்கவேண்டும்.
இவ்வாறு அந்நிய பாஷைகளை பேசி பழக தொடங்கும்போது, வாழ்க்கையிலே அதை பின்பற்றும்போது தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதத்தை அவர் நம்மில் கட்டுகிற கிருபையை, நம்மால் காணமுடியும்.
எழுந்து கட்டுவோம் வாருங்கள் !
தேவன் நமக்கு அருளும் கிருபையைக் கொண்டு,
கட்டடம் நம்மில் கட்டப்பட,
நான் எழும்பி பிரகாசிக்க!!!
For any questions, listen below video,