Vilittiru ! Vilippayiru !! – Pagam – 1 | விழித்திரு ! விழிப்பாயிரு !! – பாகம் – 1| Watch ! Watch !! – Part 1 | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon
Message Date / நாள் : 26 July 2020
Message Title / செய்தி தலைப்பு: விழித்திரு – விழிப்பாயிரு
Pastor / போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்
இன்றைய சூழலில் நாம் எப்படி விழிப்பாயிருக்க வேண்டும் ?
இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை நாம் அறிந்து கொள்ளும் போது விழிப்பாயிருக்க முடியும். கட்டளைகள் என்பது கண்டிப்பாக நாம் பின்பற்ற வேண்டிய காரியங்களை குறிக்கும்.
இயேசுவே சொல்லுகிறார். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்(மத்தேயு 13 :37).
நீங்கள் பயப்படாமல் இருங்கள். ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு, எச்சரிக்கையாய், விழித்திருங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். வஞ்சித்தல் என்றால் சத்தியத்திலிருந்து வழி விலக பண்ணுதல் என்று பொருள். தேவனுடைய வசனத்துக்கு நடுங்குகிற வனையே நான் நோக்கி பார்ப்பேன் என்று இயேசு கூறுகிறார். நாம் கவனமாக இல்லையென்றால் வஞ்சிக்கப்பட்டு போவோம். வேத வசனம் எதற்காக எழுதப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆவியின் கண்ணோட்டத்தோடு அதை நாம் பார்க்க வேண்டும்.
இயேசுவின் நாமத்தை தரித்துக்கொண்டு, இயேசு சொல்லாததை, சொல்லுகிற அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் கேட்டுக்கு ஏதுவாக வேத புரட்டுகளை தந்திரமாய் நுழைய பண்ணுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரைப் பின்பற்ற வேண்டும், யாரை பின்பற்றக் கூடாது என்பதை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
அன்பு பயத்தை புறம்பே தள்ளும். விசுவாசம் இருந்தால் நமக்குள் பயம் இருக்காது. கலக்கம் இருக்காது. தேவன் சர்வ வல்லவர். எல்சடாய். எல்லா நாமத்திற்கும் மேலானவர். என் தேவன் பெரியவர். அவருக்கு மட்டுமே, அவருடைய வார்த்தைகளுக்கு மட்டுமே நான் பயப்படுவேன் என்ற சிந்தனை வேண்டும்.
இந்த தேவ செய்தியை கேட்டு விழித்து,
விழிப்பாய் இருக்க கற்றுக்கொள்வோமா……..
தேவ வார்த்தைகளை ஏற்றுக் கொள்வோமா!
விழித்திரு …. விழிப்படைய …