Vilittiru ! Vilippayiru !! – Pagam – 3 | விழித்திரு ! விழிப்பாயிரு !! – பாகம் – 3 | Watch ! Watch !! – Part 3 | முனைவர். இராபர்ட் சைமன் | தமிழ் தேவ செய்தி | Tamil Message | Pr. Robert Simon

தேவ செய்தி நாள் : 09 ஆகஸ்ட் 2020

தலைப்பு : விழித்திருவிழிப்பாயிரு – பாகம் 3

போதகர் : முனைவர் இராபர்ட் சைமன்

ஒலிவமலை சொற்பொழிவு

ஆம். எம்பெருமானாகிய இயேசுகிறிஸ்து, தன்னுடைய சீடர்களுக்கு, எருசலேம் தேவாலயத்தின் கட்டுதல் குறித்தும், உலக முடிவின் அடையாளத்தை குறித்தும், தன்னுடைய வருகையை குறித்தும், சீடர்கள் கவனிக்க வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய 15 விழைவு வாக்கியங்களை எடுத்துரைக்கிறார். இதுவே ஒலிவமலை சொற்பொழிவு ஆகும். இயேசு கிறிஸ்துவின் இந்த கட்டளைகளை, நாம், நம் வாழ்க்கையில் பின்பற்றும் போது, நிச்சயமாக, மணவாளனுடைய வருகையில் பிரவேசிப்போம்.

தீத்து இராயனாக இருக்கும்போது ரோம சேனை எருசலேமை தரைமட்டமாக்கியது. 1948 – மே – 14 ல் இஸ்ரவேல் தேசம் பிறந்தது. அன்றைக்கு இடிக்கப்பட்ட தேவாலயம், இன்னும் கட்டப்படவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்படியே உள்ளது.

வருகையை குறித்து இயேசு கூறும் போது, மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி, மேற்கு வரை பிரகாசிப்பது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும் என்று இயேசு கூறுகிறார். அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே சூரியன் அந்தகாரப்படும். பிதா ஒருவர் தவிர வேறு ஒருவரும் அறியார்கள் என்றும் கூறுகிறார்.

இயேசு கூறிய கட்டளைகளில் முதலாவது கட்டளை ஏமாந்துபோகாதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள் என்று கூறுகிறார். நாம் கவனமாய் இல்லை என்று சொன்னால், ஏமாந்து போய் விடுவோம். எனவே எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். பொய்யர்களை சோதித்தறிந்து கண்டறியவேண்டும். பவுல் சொல்லுகிறார்: உங்களுக்குள்ளேயே ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களை பின்பற்றாதீர்கள், இல்லை எனில் உங்களது ஆவி, க பட்டு போகும் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்

மத்தேயு 25 ஆம் அதிகாரத்தில் பத்து கன்னிகைகளை குறித்து இயேசு கூறுகிறார்.

மத்தேயு 25 :1

                             “அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்”.

இதில் 5 பேர் புத்தியுள்ளவர்கள். 5 பேர் புத்தி இல்லாதவர்கள். 10 கன்னிகைகள் சபையை காட்டுகிறது. மணவாளன் இயேசுவை காட்டுகிறது என, பல வியாக்கியானங்கள் இருக்கிறது.

மணவாளன் வருகிறார் . அவரை வரவேற்க இந்த பத்து கன்னிகைகள் காத்திருந்தனர். அப்போது 10 பேரும் தூங்கிவிட்டனர். 5 பேர் தீவட்டியில் எண்ணெய் தீர்ந்து போயிற்று. 5 பேர் அதிகமாக எண்ணெய் வைத்திருந்தனர். எண்ணெய் அதிகமாக வைத்திருந்த 5 பேர் மணவாளனோடு பிரவேசித்தனர்.

நம்முடைய வாழ்க்கையிலும், நாமும் புத்திக்கூர்மையோடு செயல்படும்போது, மணவாளனோடு, நித்திய வருகையிலே பிரவே சிப்போம். நாம் நித்திரை பண்ணினாலும் விழித்திருப்போம். விழிப்பாய் இருக்க வேண்டும். விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும், விழிப்பாய் இருந்து ஜெபம் பண்ண வேண்டும்.

ஆவியை மாம்சம் மேற்கொள்ளாதிருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது இருதயம் சோர்ந்து போகாதபடிக்கு நாம் விழித்திருந்து, விழிப்பாய் இருந்து ஜெபம் பண்ண வேண்டும். எப்படியாகிலும் கர்த்தருடைய வருகைக்கு அந்த புத்தியுள்ள 5 கன்னிகைகளைப் போல், நாமும் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் அவரே

                             இயேசு கிறிஸ்துவின் ஒலிவமலை சொற்பொழிவைக் கேட்டு விழித்திருந்து, விழிப்பாய் இருக்க நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளலாமா?

விழித்திருந்த புத்தியுள்ள கன்னிகைகளை போல்

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த

மணவாளனின் வருகைக்கு

விழித்திரு! விழிப்பாயிரு!! – பாகம் 3-ன் 15 விழைவு

வாக்கியங்களை கேட்டு பரலோகத்தை சென்றடைய விழையலாமா?…

 

Share with