மகிழ்ச்சி உதயமாகிறது – Joy Dawns – Magizhchi Udhayamagirathu – Pr. Robert Simon

தலைப்பு : மகிழ்ச்சி உதயமாகிறது

மாற்று தலைப்பு : மகிழ்ச்சியுடன் வரும் காலை

போதகர்முனைவர் இராபர்ட் சைமன்

சங்கீதம் 30 : 1 – 12   

நாள்12.01.2020

1 – கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

2 – என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

3 – கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

4 – கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

5 – அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

6 – நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

7 – கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

8 – நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

9 – கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

10 – கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

11 – என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

12 – என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

 

‘சாயங்காலத்தில்  அழுகை தங்கும். விடியற்காலத்தில் மகிழ்ச்சி உண்டாகும்”.

இந்த சங்கீதத்தின் (சங்கீதம் 30) தலைப்பு – ஆலய பிரதிஷ்டைக்கான பாடல், தாவீதின் சங்கீதம், என்பது பலரின் கணிப்பு. தாவீது ஆலய பிரதிஷ்டையின் போது பாடின சங்கீதம் என்பது பலரின் கணிப்பு. தாவீது விலை உயர்ந்த கேதுரு மரங்களை கொண்டு ஒரு வீட்டை கட்டினார் . அதன் பின்பு பாடினான் என்று சொல்லுகிறார்கள்.

இது தாவீதின் பாடலாக இருக்க முடியாது. செருபாபேல் ஆலய பிரதிஷ்டையின் போது பாடின பாடல் என்று சொல்லுகிறார்கள் என்கிறார்கள். யூத ஜனங்கள் சிறையிருப்பிலிருந்து வரும்போது தங்களுக்கு வீட்டை கட்டினார்கள். அப்போது இந்த பாடலை பாடினார்கள் என்று பலர்  சொன்னார்கள்.

மற்றொரு வியாக்கியானம் என் மனதிற்கு பொருத்தமானதாக,  சரியானதாக தோன்றியது.  தாவீதுக்கு விரோதமாக, தாவீது மகன் அப்சலோம், சதி செய்து ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை நடத்துகிறான். தாவீது ராஜா காட்டுக்கு ஓடிப் போகிறான்.  சில ஆண்டுகள் கழித்து தாவீது தன் அரண்மனைக்கு திரும்பி வருகிறார். மீண்டுமாக தனது அரண்மனைக்கு தாவீது வரும்போது, தீட்டுப்பட்டு இருந்த அந்த வீட்டில் பிரதிஷ்டை பண்ணி பாடின பாடலாக இது இருக்கும் என நான் நினைக்கிறேன். எனக்கு இது பொருத்தமானதாக தோன்றியது. எந்த சூழ்நிலையில் என்பதைவிட இன்றைக்கு நம்முடைய சூழலில் இந்த சங்கீதம் பாடப்பட்டது என்பதைவிட, நமக்கு எப்படி பொருத்தமானதாக இருக்கிறது என்பதை தியானிக்கலாம்.

தாவீது மகள் தாமார் மீது, சகோதரன் அம்மோன் இச்சை வைக்க, தாவீது அறியாமல் மகளை அனுப்பி வைக்கிறான். தாவீது மகள் தாமரை சகோதரன் அம்மோன் சீரழித்து விடுகிறான். இதற்க்கு தாவீதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தாவீது மகள் தாமார் மீது, சகோதரன் அம்மோன் இச்சை வைக்க, தாவீதின் வீட்டில் நடந்தது நமது வீட்டிலும் நடக்காது என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.

பிரியமானவர்களே! அண்ணன் அப்சலோம், அவனை வெற்றி கொண்டான். தம்பி அண்ணனை கொன்றான். இதற்க்கும் தாவீதால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு நமது வீட்டில் தேவன் தமது முகத்தை மறைப்பாரானால் யாராலும் ஒன்றும் பண்ண முடியாது.

ஒரு பெரிய தீர்க்கதரிசி மிக எளிமையாக பாடல்களைப் பாடக் கூடியவன், வாத்திய கருவிகளை இசைக்கக் கூடியவன் தனது தாயாரின் ஊருக்கு சென்றுவிடுகிறான்.  இப்போது தாவீது பாடுகிறான், கர்த்தர் தமது முகத்தை மறைத்தார் , நானும் கலங்கினேன்.

இன்று நாம் ஏன் கலங்குகிறோம்? அநேக வேளைகளில் கர்த்தர் தமது முகத்தை மறைக்கும் போது கலக்கம் ஏற்படும். தாவீதினுடைய வீட்டிலேயே இது நடந்தது. கர்த்தர் முகத்தை  மறைப்பாரானால் யாராலும் ஒன்றும் பண்ண முடியாது.

தாவீதுக்கு ஆதரவாக இருந்தவர் அகிதொப்பேல். அவரும் அப்சலோமோடு சேர்ந்துகொண்டார். காரணம் அவர் உரியா மனைவியின் தாத்தா ஆவார். உரியாவின் குடும்பத்தில் இப்படி நடந்தது. யாரும் தாவீதுக்கு உதவி செய்ய இல்லை. வேதனையோடு , மனநிலை பாதிக்கப்பட்டு 60 -வது வயதில் தாவீது ,காட்டிற்கு ஓடினான்.

அப்சலோமுக்கு விரோதமாக தாவீதால் நிற்க முடியவில்லை. சங்கீதம் 30:2 தாவீது தேவனை நோக்கி கதறுகிறான்.

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்”.

சங்கீதம் 30 : 8, 9, 10

8 . நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

9.கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

10. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

            நான் குழியில் இறங்குகிறேன் . என் ரத்தத்தால் உமக்கு என்ன லாபம் உண்டு?  புழுதிக்கு புழுதியாய் போகும்போது உமது சத்தியத்தை அறிவிக்க முடியுமா? கர்த்தாவே நீர் எனக்கு சகாயராயிரும். கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிட்டேன். கர்த்தாவே உம்மை நோக்கிக் கெஞ்சினேன்.  60 -வது வயதில் தாவீது கர்த்தரை நோக்கிக் கெஞ்சினான்.

பிரியமானவர்களே!  நமது உள்ளத்தில் நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை என சொல்லாமல் இருக்க வேண்டும் .

தொழில் முனைவோர் கூடுகையில் ஒருவர் இவ்வாறு சொன்னார் : கர்த்தர் என்னை நன்றாய் ஆசீர்வதித்தார்! என் கடன்களையெல்லாம் நான் திரும்ப செலுத்தினேன்! கர்த்தர் என்னை உயர்த்தினார்!! பின்னர் சில பிழைகள் செய்ய ஆரம்பித்தேன், இப்போது மீண்டும் கடனிலேயே இருக்கிறேன் என்று கூறினார். நாம் நியாயத்தை விட்டு விலகினால், கர்த்தர் தமது முகத்தை மறைப்பபாரானால் கர்த்தரை நோக்கி ஆண்டவரே எனக்கு இறங்குங்கள்! என்று சொல்லுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிடமும் அவருடைய தயவு என்றென்றைக்கும் .

            சங்கீதம் 30 :11 இவ்வாறு கூறுகிறது:

என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டுக்களை களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்”.

என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறப்பண்ணினீர் என்று தாவீது பாடுகிறான்.

                     அவருடைய கோபம்  ஒரு நிமிடம்!

அவருடைய தயவோ நீடிய வாழ்வு;

உங்களுடைய குடும்பத்தில் நெருக்கங்கள் இருக்கலாம். ஆண்டவர் ஏன் இதை அனுமதித்தார்? என்று நீங்கள் எண்ணி வந்திருக்கலாம்.

சாயங்காலத்தில்  அழுகை தங்கும். விடியற்காலத்தில் மகிழ்ச்சி உண்டாகும்”.

இரவு என்று சொன்னால் இயேசு சொன்னார்: ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம்.  வாழ்க்கையில் அந்த நான்கு ஆண்டுகளும் தாவீதுக்கு அது பகலானாலும், இரவானாலும் இராக்காலமாய்  காணப்பட்டது. சரீரம் ஒடுங்கிப் போனது, எதிர்க்க முடியவில்லை .

அப்சலோமை எதிர்க்க தாவீதுக்கு முடியவில்லை. அதுதான் சாயங்காலம். சாயும் காலம், அதாவது விழுகிற நேரம், முடிவு காலம். என்னால் முன்பு செய்தது போல் செய்ய முடியவில்லை. சரீரத்திலும், மனதிலும்,  பலனில்லை.  கர்த்தர் எனக்கு அவருடைய முகத்தை மறைத்திருக்கிறார் . அன்றைக்கு அவர் முகத்தை பார்த்து சொன்னேன்.

நீதிமான்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது! சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினி கிடக்கும்! வாழ் நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்”

இப்போது என்னால் சொல்ல முடியவில்லை. இப்போது செய்தி வருகிறது. அவனது மனைவிகளோடு மகன் அப்சலோம் சயணிக்கிறான். தாவீது துடித்துப் போகிறான். இப்படிப்பட்ட நெருக்கமான பாதையில் சென்றாலும், கண்டிப்பாக ஒரு விடியல் இருக்கிறது.  தை பிறந்து விட்டது ஒரு வழி பிறக்கும். இந்தப் பனி போய்விடும். வழி தெரிய ஆரம்பிக்கும்.

ஆண்டவர் ஏன் இதை அனுமதித்தார்? ஆண்டவரை நோக்கி உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள். அவர் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுவார். ஒருவரும் கிரியை செய்யக்கூடாத அக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பெரிய அற்புதத்தை ஆண்டவர் செய்வார். இன்றைக்கு அந்த பனி விலகுகிறது. அப்பொழுது வழி திறக்கும். எனவே இந்த மாதத்தில் வழி திறக்கும்.

நீதியின் சூரியன் நமது வாழ்க்கையில் வெளிப்படும் போது கண்டிப்பாக மறைந்திருக்கிற வழிகள் நம் வாழ்வில் தெரியவரும். அதே சங்கீதத்தில் நீர் இப்படி செய்தீர்!      (சங்கீதம் 30.:1)  (எனக்கு ஒரு விடியல் உண்டாயிற்று என்று ஒன்பது இடங்களில் நாம் காண்கிறோம்.

இனி, நீதியின் சூரியன் நமது வாழ்க்கையில் வெளிப்படும் போது உண்டாகும் நன்மைகளை காணலாம்.

  •   நீர்   என்னை கை தூக்கி  விடுகிறீர்.

            சங்கீதம் 30.:1  – “கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்”.   

யாரோ என்னை கை கொடுத்து தூக்கி எடுத்தால்தான், என்னால் இந்த பிரச்சினைகளிலிருந்து,  நெருக்கங்களில் இருந்து வெளியே வரமுடியும் என்று காத்திருக்கும் உங்களை, !  உங்களை கர்த்தர் தூக்கிவிடுகிறார்! கர்த்தர் உளையான சேற்றில் இருந்து தூக்கி தூக்கி எடுப்பார்!. இந்த கடன் பிரச்சினையில் இருந்து, பண நெருக்கடியில் இருந்து,  அவரே உங்களை தூக்கி எடுப்பார். அவர் என்னை தூக்கி விட்டார். ஆதனால் என் வாழ்க்கையில் விடியல்  உண்டாயிற்று. கர்த்தர் என் வாழ்க்கையில் செய்யும் காரியங்கள் பயங்கரமாயிருக்கும்.

இனி நான் அசைக்கப்படுவதில்லை என கூறின தாவீது, இப்பொழுது இந்த உளையான சேற்றில் இருந்து என்னை கைதூக்கி எடுத்தபடியினால் மீண்டும் அதே இடத்திற்கு வருகிறேன் என்றான். எப்படி தாவீதின் வாழ்க்கையில் விடியல் உண்டாயிற்று ? கர்த்தர் அவனை கை தூக்கி எடுத்தபடியினால்!

  1. “கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், – (YOU HAVE NOT ALLOW IT!)

சங்கீதம் 30.:1  – “கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், …

என் சத்துருக்கள், என்னை பகைத்தவர்கள், என்னை ஏளனம் பண்ணிணவர்கள், என்னை இச்சித்தர்கள் என்னை மேற்கொண்டு மகிழ விடாமல் செய்தீர்!  உம்முடைய நாமத்தில் நான்  கோலியாத்திற்க்கு விரோதமாக ஓடியது உண்மைதான். உம்முடைய நாமத்தில் பெலிஸ்தியரை  மேற்கொண்டது உண்மைதான்.

இப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் அப்சலோமுக்கு விரோதமாக ஓட மாட்டேன். இப்போது நான் ஓடவில்லை. ஆண்டவரே! என்று தாவீது பாடுகிறான். நான் போய் அந்த பெலிஸ்தியரின் நுனித்தோலை வெட்டவில்லை. ஒன்றுமே செய்யவில்லை ஆண்டவரே! ஆனாலும் என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ விடாமல் காத்துக் கொண்டீர்! அவர்களுக்கு முன்பாக உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், உங்கள் சத்துருக்களை வெற்றி கொள்வீர்கள் . உங்கள் வாழ்க்கையில் விடியல் உண்டாயிற்று!

உங்கள் சத்துருக்கள், உங்களை மேற்கொள்ளாதவாறு செய்து, உங்களை மகிழச் செய்வார். அப்பொழுது என் வாழ்வில் விடியல் உண்டாயிற்று! தாவீது சொல்லுகிறான்! அப்பொழுது இருளில் வெளிச்சம் உண்டாயிற்று! ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓடிப்போனார்கள்! என் இடத்தை நீரே மேற்கொண்டு என் சத்துரு என்னை மேற்கொள்ளாதபடி காத்துக் கொண்டீர்.

மகிழ்ச்சியோடு வருகிறது விடியல்! REJOICE COMES WITH THE MORNING !

3. என்னை நீர் குணமாக்கினீர்”.

சங்கீதம் 30.:2என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்”.

என் தேவனாகிய கர்த்தாவே என்னை நீர் குணமாக்கினீர்! தாவீது ராஜாவுக்கு மனதில் பயங்கர வேதனை இருந்தது.  வெறும் காலால், கிட்டதட்ட நிர்வாணமாய் காட்டுக்கு ஓடிப் போனான். என்ன செய்வது என்று தெரியவில்லை . மனதில் உடலில் பயங்கர வேதனை. நமது வாழ்விலும் இதே போன்ற நெருக்கமான சூழ்நிலை. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. நிற்க பலனில்லை . ஆண்டவர் என்னை நிற்க பண்ணினபடியினால் நான் குணமானேன். ஆண்டவரே! நீர் என் வேதனையிலிருந்து, கஷ்டத்திலிருந்து, என்னை குணமாக்கி விடியலை என் வாழ்விலே காண பண்ணினீர்.

4. என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப் பண்ணினீர்

 சங்கீதம் 30 :3- “கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்”.

அவனுடைய ஆத்துமா பாதாளத்தில்  இறங்கி போனது. அப்பொழுது தாவீது சொல்லுகிறான் : “நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினீர்”

சில வேளைகளில் நமது வாழ்வில் கஷ்டங்கள் நெருக்கங்கள் வரும்போது  நமது ஆத்துமா சோர்ந்து போகிறது.

தாவீது, ஆண்டவர் என்னை நிற்க பண்ணினபடியினால் நான் குணமானேன்! என்று  சொல்லுகிறான்.  ஆண்டவரே! நீர் என் வேதனையிலிருந்து கஷ்டத்திலிருந்து என்னை குணமாக்கி விடியலை என் வாழ்விலே விடியலை காண பண்ணினீர். என்று  தாவீது சொல்லுகிறான்.

5. “நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்”

சங்கீதம் 30 : 5 – “நான் குழியில் இறங்காதபடி   என்னை உயிரோடே காத்தீர்”

சங்கீதம் 30 : 7 – “கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர்  என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்  பண்ணியிருந்தீர்;”

நம்மால் வாழ முடியாத  பட்சத்தில் நாம் சாவை விரும்புகிறோம்.

உம்முடைய தயவினால் என்னுடைய பர்வதத்தை திடமாய் நிற்க பண்ணினீர்! அவருடைய தயவு நீடிய வாழ்வு! அதுதான் வாழ்வு.  In your favour is my life. என்னுடைய சந்தோஷம், என்னுடைய மகிழ்ச்சி, எல்லாம் உம்முடைய தயவில் இருக்கிறது . தாவீதுக்கென்று ஒரு ராஜ்ஜியம் இருந்தது . ஒரு குடும்பம் இருந்தது. அது சுக்குநூறாய் நொறுங்கிப் போனது. ஆனால் தாவீதின் வம்சத்தை அழிய விடாமல் காத்து, அந்த தாவீதின் வம்சத்தில் உலக ரட்சகரை தேவன் கட்டளையிட்டார்! தாவீதுடைய குடும்பத்தை தேவன் திடமாய் நிற்க பண்ணி னார்! கர்த்தர் விடியலை கட்டளையிடும்போது உங்களது குடும்பம், வியாபாரம் , ஊழியம் எல்லாவற்றையும் தேவன் திடமாய் நிற்கபண்ணுவார். நீங்கள் அழிந்து போக மாட்டீர்கள்! விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் ! மகிழ்ச்சியோடு விடியும் காலம் உண்டாகும் .

தங்கையை சீரழித்த அண்ணன், அண்ணனை கொன்ற தம்பி, நான் அசைக்கப்படுவதில்லை என்று சொன்ன தாவீது, தகப்பனை இரவோடு இரவாக விரட்டியடித்த மகன், இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில்தான் நமது சமாதான பிரபு வந்தார். தாவீதின் வாழ்க்கையில் ஒரு விடியலை கட்டளையிட்டார். அந்த சமாதான பிரபு நம்முடைய வாழ்க்கையிலும் விடியலை கட்டளையிடுவார். நம் அனைவர் வாழ்விலும் கர்த்தர் விடியலை கட்டளையிடுவார் .

6. “என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; “

சங்கீதம் 30 : 11 – “என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; “

18 ஆண்டுகள் பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு கர்த்தர் விடியலை கட்டளையிட்டார்.  12 ஆண்டுகள் உதிர ஊறலினால்  கஷ்டப்பட்ட ஸ்திரீக்கு வாழ்க்கையில் பெரிய அற்புதத்தை கர்த்தர் செய்தார். அன்றைய காலத்தில் பெதஸ்தா குளம் ஒன்று காணப்பட்டது,. தேவதூதன் வந்து அந் தொடுகிறார்கள் த தண்ணீரை கலக்கும்போது முதலாவதாக யார் அந்த தண்ணீரை தொடுகிறார்கள அவர்களுக்கு இருக்கும் வியாதி மறையும். இப்படி விடுதலையை பெற்றுக் கொண்டவர்கள் அநேகர்.. கர்த்தர், இறந்துபோய் நான்கு நாட்கள் ஆனபிறகும், பிரேத பெட்டியிலிருந்து, மரித்த லாசருவை, உயிரோடு எழுப்பினார்! அன்றைக்கு அவர்கள் வாழ்க்கையில் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற்றிய தேவன், இன்றும் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.

7. என் இரட்டுக்களை களைந்து போட்டார்

சங்கீதம் 30 : 11 –என் இரட்டுக்களை  களைந்து போட்டு”….

வெளிப்பிரகாரமாக இப்போது இரட்டுடுத்தி சாம்பலில் நிற்கிறார்! சிலர் உங்களைப் பார்த்து என்ன sister இப்படி ஆகிப் போய்விட்டது? என்பார்கள். எல்லோரும் பார்க்க நீ இரட்டுடுத்தி இருக்கிறாய். நீ சாம்பலில் இருக்கிறாய். உன் வீட்டுப் பிரச்சனை தெருவிற்கு வந்து விட்டது. என் தகப்பனார் நிறைய சொத்து வைத்திருந்தார். எல்லாம் வியாபாரத்தில் போய்விட்டது. எனது சின்ன தாத்தா வந்தபோது, அப்போது எனது அக்கா ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் அதை சின்ன 10 என்பார்கள். சிறிய தாத்தா கூறினாராம், “இவள் சின்ன 10 முடித்து, பெரிய 10 முடித்து, அவள் ஒரு வேலைக்குப் போய், எங்கப்பா உங்க குடும்பம் எழும்ப போகிறது? என்று சின்ன தாத்தா  சொன்னாராம். கர்த்தர் குடும்பத்தை நன்றாக ஆசீர்வதித்து பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும், ஆசீர்வதித்து பூமியின் உயர்ந்த ஸ்தானங்களில் ஏறிவர பண்ணியிருக்கிறார்! கர்த்தர் உங்கள் இரட்டை மாற்றுவார். கர்த்தர் உங்களை கைவிடவே மாட்டார்! உங்களை உயர்த்துவார்! தேவன் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறார்.

8. என் ஆண்டவராகிய கர்த்தாவே என் மகிமை உம்மைத் துதிக்கும்

 சங்கீதம் 30 :12-என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்”.

                      தாவீது பாடுகிறான், என்னை புழுதியிலிருந்து உயர்த்தினீரே ! உம்மை நான் உயர்த்துவேன்! இது  எந்த வீட்டின் பிரதிஷ்டை என்பது அல்ல! எந்த ஆலயத்தில் பிரதிஷ்டை என்பது அல்ல! இது  என் வீட்டின் பிரதிஷ்டை! இது  என் திருச்சபையின் பிரதிஷ்டை! என்னுடைய பிரதிஷ்டயாவது, ஆண்டவரே! எக்காலத்திலும் உம்மை நான் ஸ்தோத்தரிப்பேன்!

                 “ இந்த தேவன் என்றென்றைக்கும் உள்ள சதா காலமும்  நமது தேவன்!  மரணபரியந்தம் என்னை நடத்துவார்”

கர்த்தர் என் இருளை வெளிச்சம் ஆக்கினார்! அதுவே நான் கொண்டாடும் பண்டிகை ! உளையான சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்தார்! எனது அழுகையை ஆனந்தக் களிப்பாக மாற்றினார்!

உங்களது பரிசுத்தத்தின் நினைவு கூறுதலை கொண்டாடுங்கள்! இதுவே நீங்கள் கொண்டாடும் பண்டிகை!

2 சாமுவேல் 23 – 1 இப்படியாக கூறுகிறது:

           “தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்:”

74 வயதில் தாவீது மரிக்கும்போது, வேதத்தில் அவனது பெயர் இப்படியாக பதிவாகி இருக்கிறது. “இஸ்ரவேலின் இனிய பாடகனாகிய தாவீது”,இனிய சங்கீதக்காரனாகிய இனிய தாவீது”,  “THE SWEETEST PSAMIST  என்ற பெயர் வருகிறது.

இனி நீ அழுதுகொண்டிராய்! உன்னுடைய புலம்பல் ஆனந்தக் களிப்பாக மாறும்!” 

“கர்த்தர் உன்னை மகிழ்ச்சியின் விடியலை காணப்பண்ணுவார்”

Share with