Carmel 24 Hours Chain Prayer – July 11, 2020 – கர்மேல் 24 மணி நேர ஜெப சங்கிலி – ஜூலை 11, 2020
கர்மேல் ஜெபசங்கிலி
# ஜூலை 11, 2020 காலை 08 மணியிலிருந்து ஜூன் 12, 2020 காலை 08 மணிவரை
ஒரு மணிநேரத்திற்கான ஓர் ஜெப உருவரை
15 நிமிடங்கள் : துதி ஸ்தோத்திரம், சுத்திகரிப்பு, பாவமன்னிப்பு ஜெபம் (கடந்த வார குறிப்புகளின் அடிப்படையில்).
45 நிமிடங்கள் : மன்றாட்டு ஜெபம்
ஜெபக்குறிப்புகள்:
1. போதகரின் உடல்நிலை சீராக தேறிவருகிறது. எல்லாவகையிலும் பெலனடைந்து முன்நிலைமைக்கு திரும்பவேண்டும்.
2. கவனித்துக்கொள்ளும் பாஸ்டரம்மா, சபை பணியாளர்களின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.
3. வியாதி பெலவீனத்துடன் காணப்படும் சபை விசுவாசிகள் மற்றும் அவர்களை கவனித்துகொள்வோரின் சுகம், பெலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.
4. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இச்சூழலில் தங்கள் வேலை, தொழில் மற்றும் ஏனைய பணிகளுக்கு திரும்பும் நம் கர்மேல் உறவுகள் தேவனால் பாதுகாக்கப்படவேண்டும்.
5. தேவபிள்ளைகள், விசுவாசிகள் பயத்திற்கு சற்றாகிலும் இடங்கொடுக்காமல் விசுவாசத்தில் வளரவேண்டும்.
6. கர்மேலர்கள் அவர்கள் வசிக்கும் தெரு, பணியிடம், பள்ளி/கல்லூரி வகுப்பு மற்றும் உறவுகளில் குறைந்தபட்சம் மூன்று நபர்களின் இரட்சிப்புக்காக ஜெபிக்கவும், பொறுப்பெடுக்கவும் தேவன் கிருபை அருளவேண்டும்.
7. இந்த நாட்களில் தேவ ஊழியர்களும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வேதனைகளை அனுபவிக்கின்றனர். ஊழியக்காரரின் சுகத்தை விரும்பும் தேவனால் இவர்கள் குணமடைந்து பாதுகாக்கப்படவேண்டும்.
8. சென்னை நகரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்றே குறைந்து வரும் சமயத்தில், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும், குறிப்பாக தெனபகுதியில் எண்ணிக்கை அதிவேகமாப் பரவிவருகிறது. அனைத்து மாவட்டங்களும் தேவனால் காக்கப்படவேண்டும்.
9. புதிய கல்வியாண்டின் பாடத்திட்டம், பாடமுறைமை ஆன்லைன் வகுப்புகள் போன்ற காரியங்களில் அனைவருக்கும் சமதளத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும்.
10. நம்முடைய தேசத்திற்கு ஷேமம் உண்டாக, தேவப்பிள்ளைகள் யாவரும் தங்களை தாழ்த்தி, தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பி தேவனை தேடவேண்டும்.
பொதுவாக
# மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், வங்கியாளர்கள் – மக்கள் தொடர்பாளர்கள் நலன் காக்கப்பட.
# வேதனையினால் மக்கள் தேவனைத் தூஷியாமல், தேவனிடத்தில் திரும்ப.
# வெளியூர்களில்/மாநிலங்களில்/நாடுகளில் வாழும் நமது உறவுகளுக்காக.
# தேவன் தாமே இரக்கஞ்செய்து இந்த (கொரோனா வைரஸ் கோவிட்-19) வாதையை அற்புதமாய் நிறுத்த வேண்டும்.
CARMEL CHAIN PRAYER
JULY 11, 2020 08:00 AM to JULY 12, 2020 08:00 AM
Outlines for one hour of prayer
15 Minutes : Praise and Worship and Prayer for Sanctification
45 Minutes : Intercessory Prayer
Prayer Points
1. Pastor’s health is steadily improving. Pray for renewal of strength and restoration to former state.
2. Pray for the health, strength and well-being of care-givers viz., Pastoramma and church staff.
3. Some of our loved ones are unwell, weak and sick. Pray for their healing, strength and protection. Pray also for their care-givers.
4. With relaxation in lock-down rules, the movement of people has greatly increased. The loved ones of Carmel who are returning to work, during these challenging times, must be divinely protected.
5. People of God, believers should give no places to fear, but grow in faith.
6. God must give the grace to all Carmeleans to be responsible and bear accountability for the salvation of at least 3 members in their street/work place/class/relatives.
7. These days, Servants of God are also getting inflected and suffering because of COVID-19. Our God who desires the well-being of his servants, should heal the protect them.
8. Even though the numbers are declining in Chennai, it is increasing very steeply in all the Southern Districts of Tamil Nadu. All the districts must be protected by God.
9. The syllabus, teaching methodology, online curriculum with respect to the New Academic year should be such that it creates a level-playing field to children belonging to all the cross sections of the society.
10. In order for our country to be healed, people of God should seek God in all humility by confessing their sins and turning from their evil ways.
General
# Medicos, health workers, policeman, government staff, business people, bankers – the welfare of all public relation workers should be guarded
# People, instead of cursing God amidst their pains, they must return to him.
# Pray for our loved ones who are stranded/staying in different states/districts and countries.
# God to stop this pandemic Coronavirus (Covid-19) in a miraculous manner.
Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,
Pr. Robert Simon / Pr. இராபர்ட் சைமன்